விக்கிரவாண்டி: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

625பார்த்தது
விக்கிரவாண்டி: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவநீதன் (19), பெற்றோர் படிக்காமல் ஊர் சுற்றுவதாகக் கண்டித்ததால் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறி, விக்கிரவாண்டி ஏரிக்கரை அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிணற்றின் அருகே அவரது செல்போன் மற்றும் காலணிகள் கிடந்தன. விக்கிரவாண்டி போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி