கோட்டக்குப்பம்: தொண்டையில் உணவு சிக்கி பெண் இறப்பு

63பார்த்தது
கோட்டக்குப்பம்: தொண்டையில் உணவு சிக்கி பெண் இறப்பு
கோட்டக்குப்பம் நடுக்குப்பம் ரோடு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பாபு. சென்னையில் செக்யூரிட்டி வேலை செய்கிறார். இவரது மனைவி சுசிலா, 56; இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.  இரவு சுசிலா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது உணவு விழுங்கும்போது, தொண்டையில் உணவு சிக்கியது. 

இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சுசிலா தரை மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சுசிலா வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாபு அளித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி