பேக்கரியில் பணம் திருடிய தொழிலாளி கைது ரூ4. 65 லட்சம் மீட்பு

1பார்த்தது
பேக்கரியில் பணம் திருடிய தொழிலாளி கைது ரூ4. 65 லட்சம் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பூத்துறை தனியார் பேக்கரியில் வேலை செய்த சுந்தர் (19) என்பவர் ₹7 லட்சம் திருடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேக்கரி மேலாளர் விஜயராஜ் அளித்த புகாரின் பேரில், 01.11.2025 அன்று ஆரோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கோட்டகுப்பம் துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் குற்றவாளி என கண்டறியப்பட்டு, மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ₹4,65,000 மீட்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி