சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த 42 வயது கூலித்தொழிலாளி வெங்கடாசலம், வானூர் அருகே எறையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில்
வேலை முடிந்து பழைய குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் குளித்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வானூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.