கண்டமங்கலம் அருகே எலி மருந்து சாப்பிட்ட வாலிபர் இறப்பு

62பார்த்தது
கண்டமங்கலம் அருகே எலி மருந்து சாப்பிட்ட வாலிபர் இறப்பு
விழுப்புரம் மாவட்டம், கோண்டூர் இந்திராநகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சச்சின் (18). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள சச்சின், தினமும் கைப்பேசியில் விளையாடுவாராம். கடந்த 8-ஆம் தேதி சச்சின் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததை கண்ட அவரது தந்தை, கைப்பேசியை பிடுங்கினாராம்.

 இதனால் கோபமடைந்த சச்சின் வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை தின்று மயங்கிக் கிடந்துள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சச்சின், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி