
விழுப்புரம்: சாதிவாரி கணக்கெடுப்பு ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு இடைக்கால தீர்வாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும் பாமக நிறுவனர் டாக்டர் ச. இராமதாசு அறிவித்துள்ளார். இதற்கான அறவழி ஆர்ப்பாட்டம் டிசம்பர் 5-க்கு பதிலாக டிசம்பர் 12, 2025 அன்று நடைபெறும். சமூக நீதி நோக்கில் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அனைத்து மாவட்ட கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.






































