விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் என 2 இடங்களில் மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்கப்பட உள்ளது. இதையடுத்து 2 இடங்களிலும் வாகன போக்குவரத்தை திருப்பி விட சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் மேம்பாலம் அமைய உள்ள இடங்களையும் பார்வையிட்டு, பணி நடைபெறும் சமயங்களில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து நகராட்சி திட்ட இயக்குனர் வரதராஜனிடம் ஆலோசனை நடத்தினார். பின், விக்கிரவாண்டியில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு விற்பனையாளரிடம் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார்.
நகராட்சி பொறியாளர் செல்வராஜ், டோல் கேட் திட்ட மேலாளர் சதீஷ் குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜேஷ், மருந்தக விற்பனையாளர் வினாயக முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.