அதிமுக புதிய மாவட்டச் செயலர் பசுபதி விழுப்புரம் வந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அதிமுக அலுவலகத்தை ஒப்படைக்கவும், சாவியை பெற்றுத் தரக் கோரியும் மாவட்டச் செயலர் பசுபதி காவல் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில், விழுப்புரம் கோட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (மே 18) பேச்சுவார்த்தை நடைபெறும். இரு தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் முருகேசன் அறிவித்துள்ளார். இதனால், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.