விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். காணை குறுவட்டம், காங்கியனூர் கிராமத்தில், வீடு கட்டி வசித்து வரும் 6 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைக்கான உத்தரவை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, முன்னாள் ஒன்றிய செயர்மன் கல்பட்டு ராஜா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.