முன்னாள் மாணவர்கள் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்தனர்

245பார்த்தது
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2003-2005 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர்களுடன் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு பழைய நினைவுகளை அசைபோட்டனர். தங்களை அறிமுகம் செய்துகொண்டதோடு, பள்ளிக்கு கணினி மற்றும் பிரிண்டர் வழங்கினர். இந்த சந்திப்பு பழைய மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி