விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (33) என்ற லாரி ஓட்டுநர், மதுப் பழக்கத்தால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவியும் குழந்தைகளும் தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விக்கிரவாண்டி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.