விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார், தொரவி கிராமத்தில் சண்முகம், 30; என்பவர் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில், குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 30 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.