விக்கிரவாண்டியில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ

52பார்த்தது
விக்கிரவாண்டியில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ
விக்கிரவாண்டி தொகுதி, பனமலைபேட்டையிலிருந்து அடையார்; அடையாறில் இருந்து பனமலை பேட்டை; மற்றும் பனமலை பேட்டையில் இருந்து விழுப்புரம் பைபாஸ் வழியாக புதுச்சேரி ஆகிய மூன்று வழித்தடங்களில், புறநகர் பஸ் சேவை நேற்று துவங்கியது. அதேபோல், தொரவி தாங்கலிலிருந்து விழுப்புரம்; வெங்கமூரிலிருந்து விழுப்புரம்; விழுப்புரத்திலிருந்து அன்னியூர் அரசு கலைக்கல்லூரி வழியாக திருக்குணம்; விழுப்புரத்தில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; விழுப்புரத்திலிருந்து அன்னியூர் அரசு கலைக்கல்லூரி வழியாக பனமலைப்பேட்டை ஆகிய 5 வழித்தடங்களில், அரசு டவுன் பஸ் சேவை துவங்கப்பட்டது. மொத்தம், 8 புதிய பஸ்களை விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி