விக்கிரவாண்டி: விபத்தில் காயமடைந்தோருக்கு எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்

56பார்த்தது
விக்கிரவாண்டி: விபத்தில் காயமடைந்தோருக்கு எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்
விக்கிரவாண்டி அருகே வி. சாலை கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் டிராக்டர் மூலம் மயிலம் கோவிலுக்குச் சென்று நேற்று முன்தினம் காலை திரும்பினர். மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்து விக்கிரவாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனை உதவி மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி வெங்கடேசனிடம் முறையான சிகிச்சை அளிக்க கூறினார். மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சங்கீதா அரசிரவிதுரை, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகன், மாவட்ட விவசாய அணித் தலைவர் பாபு ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி பாலு, செல்வம், ஊராட்சி மன்றத் தலைவி சாவித்திரி கவியரசன், மாவட்ட பிரதிநிதி அசோக், செயலாளர்கள் சிவா, சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி