விக்கிரவாண்டி: குண்டும் குழியுமான VKT சாலை; பேட்ச் ஒர்க் செய்ய மக்கள் கோரிக்கை

63பார்த்தது
விக்கிரவாண்டி: குண்டும் குழியுமான VKT சாலை; பேட்ச் ஒர்க் செய்ய மக்கள் கோரிக்கை
விக்கிரவாண்டியிலிருந்து பின்னலுார் - சேத்தியாதோப்பு வரை வி.கே.டி. சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரர் நியமனம் செய்யாமல் தற்காலிகமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள டில்லியில் உள்ள அதிகாரிகள் கடந்த 7ம் தேதி டெக்னிக்கல் டெண்டரில் புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்துள்ள நிலையில், பணிக்கான நிதி (பட்ஜெட்) டெண்டர் வரும் 26ம் தேதி திறக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமான இடங்களில் பேட்ச் வொர்க் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விக்கிரவாண்டியிலிருந்து கோலியனுார் கூட்டுரோடு வரை உள்ள 13 கி.மீ. தூர சாலையில் பெரிய பாதிப்புகளை மட்டும் பேட்ச் வொர்க் செய்துள்ளனர். ஆனால், சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி பலத்த காயமடைந்து வருகின்றனர். பெரிய அளவு பாதிப்புகளை சரி செய்யும் போதே சிறிய அளவிலான குண்டு, குழிகளை அடைத்திருந்தால் விபத்துகளின்றி எளிதாக பயணிக்க முடியும். கப்பியாம்புலியூர் அடுத்த மேல்பாலி கிழக்கு பகுதியில் உள்ள சாலைகளின் நடுவே இருந்த சிறிய அளவிலான பள்ளங்கள் தற்போது பெரிய பள்ளங்களாக ஏற்பட்டு மரண பயத்தை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி