சேதமான வடகுச்சிபாளையம் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

62பார்த்தது
சேதமான வடகுச்சிபாளையம் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விக்கிரவாண்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது வடகுச்சிபாளையம் கிராமம். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. இக்கிராமத்தில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு 3 கி.மீ. தூரம் நடந்து வந்து சிந்தாமணியில் பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. 

கிராமத்திற்கு செல்லும் பிரதான 3 கி.மீ. தூரமுள்ள சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் அமைத்த சாலை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

எனவே கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வடகுச்சிபாளையம் கிராம சாலையை புதுப்பித்து தார் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி