விக்கிரவாண்டி எம்எல்ஏ அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு

0பார்த்தது
விக்கிரவாண்டி எம்எல்ஏ அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ச. சிவக்குமார், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான வசதிகளை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் சென்று, வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.