இரு வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

0பார்த்தது
இரு வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தன் (26) வெங்காயக்குப்பத்தில் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும்போது மின் மோட்டாரை இயக்கியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல் செஞ்சி அடுத்த கோணை கிராம விவசாயி செல்வராஜ் (55) தனது நிலத்தில் மின் மோட்டாரை இயக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கஞ்சனூர் மற்றும் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி