விக்கிரவாண்டி: முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி சிலை திறப்பு விழா

58பார்த்தது
விக்கிரவாண்டி: முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி சிலை திறப்பு விழா
விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, மறைந்த விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ, புகழேந்தி சிலையை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன், அவை தலைவர் ஜெயச்சந்திரன், அன்னியூர் சிவா இரங்கல் உரையாற்றினர். 

மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, ஆவின் இயக்குனர் அரிகரன், நகர துணை செயலாளர் பொறியாளர் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் பிரசன்னதேவி செல்வக்குமார், கிருஷ்ணம்மாள் புகழேந்தி, ஒன்றிய கவுன்சிலர் வெற்றிசெல்வி தெய்வகணபதி, சாந்தி செந்தில்குமார், சுமதி அசோக் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இறுதியாக அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், புகழேந்தி குடும்பத்தினர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. புகழேந்திக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி