புதுச்சேரி சாலையில் மதுவிலக்கு சோதனைச் சாவடிப் பகுதியில் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார், சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்டபோது, அதில் மதுப் புட்டிகள் இருந்தன. விசாரணையில், புதுச்சேரியில் இருந்து விற்பனைக்காக மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக பாலசுந்தரம் (54) தெரிவித்தார். அவரிடமிருந்து மதுப் புட்டிகளை வாங்கிய பிரகாஷ் (40) என்பவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். இருவரிடமிருந்தும் 1,200 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர்.