விழுப்புரம் மாவட்டம் தொரவி மற்றும் வாக்கூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கர், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி. வி. பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முட்ராம்பட்டு, நெற்குணம், பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, ராதாபுரம், வெட்டுக்காடு மற்றும் டி. புதுகுப்பம் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.