விக்கிரவாண்டி ஒத்தவாடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆனந்தபாபு (45), நண்பர்களுடன் வீடூர் அணைக்குக் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி மாயமானார். நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியில் ஆனந்தபாபுவின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.