
குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வெள்ளம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்மொழி (25), வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கணவர் கார்த்திக் வேலை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தாமதித்ததால் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த அவர், கடந்த 18-ஆம் தேதி தனது 5 வயது மகன் பிரதீப்புடன் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

























