1. 1/2 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கெண்டியங்குப்பம் பகுதியில் நடத்திய சோதனையில், ரயில்வே கேட் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்த நாராயணன் என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 24 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் குறைந்த விலைக்கு வாங்கி புதுச்சேரி மாநில உணவகங்களில் விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நாராயணனை போலீசார் கைது செய்தனர்.
