விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வாலியாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு, ஆதிவாலீஸ்வரர் மற்றும் வாலியாம்பிகை அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.