விழுப்புரம்மாவட்டத்தில் காவலர்தேர்வு 10, 859 பேர்எழுத உள்ளனர்

1பார்த்தது
விழுப்புரம்மாவட்டத்தில் காவலர்தேர்வு 10, 859 பேர்எழுத உள்ளனர்
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 9-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 10,859 தேர்வாளர்கள் 8 மையங்களில் எழுத உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் உமா அவர்களின் மேற்பார்வையில் சுமார் 1300 காவல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வாளர்கள் காலை 8 மணிக்குள் மையத்துக்கு வர வேண்டும். 9.30 மணிக்குப் பிறகு அனுமதி இல்லை. ஹால் டிக்கெட், கருப்பு பந்து முனை பேனா, அடையாள அட்டை கட்டாயம். மொபைல், ஸ்மார்ட்வாட்ச், ப்ளூடூத் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி