விழுப்புரம் அருகே கௌதம் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சேகர், சென்னை சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 12 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய சேகர் இதுகுறித்து தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.