திண்டிவனம் அடுத்த மயிலம் ஒத்தவாடை தெருவில் வசிக்கும் பொன்னி (55) என்பவர், நேற்று (மே 5) காலை வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றார். முற்பகல் 2 மணியளவில் வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அவரது மகன் மணி அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.