விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியின்போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (23) மற்றும் கடலூரைச் சேர்ந்த மணிமாறன் (23) ஆகிய இரு இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஒடிசாவிலிருந்து ரயிலிலும், சென்னையிலிருந்து பேருந்து மூலமாகவும் கஞ்சாவை விற்பனைக்காக விழுப்புரம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.