காரில் கடத்திய 2 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்2 பேர் கைது

1பார்த்தது
காரில் கடத்திய 2 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்2 பேர் கைது
விழுப்புரம்- செஞ்சி புறவழிச்சாலையில் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில், தடை செய்யப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்கள் அடங்கிய 11,620 பாக்கெட்டுகளுடன் வந்த காரை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்சன்குமார் (26) மற்றும் உசைன்கான் (29) ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி