விழுப்புரம் அருகே பனங்குப்பம் தோப்பு தெருவில் தமிழ்ப்பிரியன் என்பவரின் கூரை வீட்டில் புதன்கிழமை மாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் இருந்த அவரது சகோதரர் இன்பத்தமிழன் வீட்டிற்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இரண்டு வீடுகளும், டி.வி., கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் என சுமார் ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.