2026-2027 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5 முதல் தொடக்கம்

0பார்த்தது
2026-2027 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5 முதல் தொடக்கம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தேசிய மாணவர் படை ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வரும் ஜூன் 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 8 முதல் ஜூன் 17 வரை பாடப்பிரிவு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் காலை 9 மணிக்கே சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.