விழுப்புரம்: வீட்டை உடைத்து 25 சவரன் நகைகள், ரொக்கம் கொள்ளை

499பார்த்தது
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் சங்கர் குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் மற்றும் ரூ. 55,000 ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி