விழுப்புரத்தில் விதி முறைகளை மீறிய 4 ஆட்டோக்கள் பறிமுதல்

424பார்த்தது
விழுப்புரம் நகரத்தில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் குமாரராஜா தலைமையில், போக்குவரத்து காவல்துறையினர் நான்கு முனை சந்திப்பில் விதிமுறைகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக ஓட்டிய 4 ஷேர் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி