விழுப்புரம், சாலமேடு என். ஜி. ஓ. , காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சாந்தி, (50). இவர், உளுந்துார்பேட்டையில் 10வது பட்டாலியன், காவல் படை அலுவலக நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் புதுச்சேரியில் அரசு பணியில் உள்ளார்.
இருவரும் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் (செப் 27) இரவு 9: 00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், நேற்று (செப் 28);விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.