ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டில் 5. 1/2 லட்சம் நகையும் பணம் திருட்டு

3பார்த்தது
ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டில் 5. 1/2 லட்சம் நகையும் பணம் திருட்டு
கடந்த 18-ம் தேதி விழுப்புரம் கே. ஆர். சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி (62) வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர் வீடு திரும்பியபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் (மொத்த மதிப்பு ரூ. 5, 50, 000) திருட்டுப்போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி