விழுப்புரம் அருகே செம்மார் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்கொண்ட மேற்பரப்பு களஆய்வில், சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கைக்கோடாரி கண்டறியப்பட்டுள்ளது. கருங்கல்லால் ஆன 11.5 செ.மீ நீளமுள்ள இந்தக் கைக்கோடாரி, புதிய கற்கால மனிதர்களின் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் காட்டுகிறது. புதிய கற்காலத்தில்தான் மனிதன் நிலையான இருப்பிடங்களை அமைத்து விவசாயம் செய்யத் தொடங்கினான். தென்பெண்ணை ஆற்றங்கரைப் பகுதிகளில் இதுவரை 13 புதிய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.