விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ராமச்சந்திரன் (29) என்பவரிடம், தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி விழுப்புரம் கம்பன் நகரைச் சேர்ந்த கந்தன் (74) மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெரோம் லூர்து ராஜா ஆகிய இருவர் ₹9 லட்சம் வாங்கியுள்ளனர்.
வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதால், ராமச்சந்திரன் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவர்கள் ₹2 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதி ₹7 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.