விழுப்புரம் அருகே பா. வில்லியனூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பிடாரியம்மன் கோவில் கோபுரத்தின் 8 கலசங்கள் நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கோவிலில் இருந்த எட்டு கலசங்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு வளவனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.