விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட, எல்லிஸ்சத்திரம் சாலை பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் முன்னிலையில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கிராம பகுதியில் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.