விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டண பெண்கள் கழிவறையில் 3 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாராந்திர குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பெண் ஒருவர், கழிவறையில் பாம்பைக் கண்டு அச்சமடைந்து அலறியடித்தபடி வெளியே வந்து தீயணைப்புத் துறையினரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கழிவறையில் இருந்த பாம்பை லாவகமாகப் பிடித்து, அருகில் உள்ள காப்புக்காட்டிற்குள் பத்திரமாக விட்டனர்.