விழுப்புரத்தில் நடந்து சென்ற நபர் மயங்கி விழுந்து இறந்தார்.

0பார்த்தது
விழுப்புரத்தில் நடந்து சென்ற நபர் மயங்கி விழுந்து இறந்தார்.
விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் (51) என்பவர், திருவாமாத்தூர் சாலையில் உள்ள உணவகம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி