ஆட்டோவில் மதுபானம் கடத்திய ஒருவர் கைது.

0பார்த்தது
ஆட்டோவில் மதுபானம் கடத்திய ஒருவர் கைது.
விழுப்புரம் அருகே சிறுவந்தாடு சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார், புதுச்சேரியிலிருந்து ஆட்டோவில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்த மரகதபுரத்தைச் சேர்ந்த ரா. மணிகண்டன் (38) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 149 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி