விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 48; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 31ம் தேதி இரவு, வளவனூர் - சிறுவந்தாடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் படுகாயமடைந்த செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு, வளவனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.