விழுப்புரத்தில் தொடர் ஆடு மாடுகள் திருட்டால் பரபரப்பு

53பார்த்தது
விழுப்புரம், சாலாமேடு, மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் குமார். கட்டட தொழிலாளி. ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த 2 பசு மாடுகள் சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

 சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டில் கட்டியிருந்த 3 ஆடுகளும், ரவி என்பவரது வீட்டிலிருந்து ஒரு ஆட்டையும் திருடிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் வரும் மர்ம நபர்கள், ஆடு மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நகை பணம் திருடுவது போல், தற்போது ஆடு, மாடுகள் திருட்டு அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி