விழுப்புரம்: கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டி

420பார்த்தது
விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில், 72வது சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சங்கம் மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில்  மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் பந்தயம், பெண்கள் கோலப் போட்டி நடத்தப்பட்டன. விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, துணைப்பதிவாளர் சிவபழனி ஆகியோர் போட்டிகளை மேற்பார்வையிட்டு, சிறந்த போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி