திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி (27), அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.