விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அருகே தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வில், புதிய கற்காலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தட்டு வடிவிலான இந்த சிவப்பு நிற விளக்கில் நான்கு திரிகள் உள்ளன. இது பழங்கால மனிதர்கள் தென்பெண்ணையாற்றங்கரையிலும் வாழ்ந்திருந்தனர் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. இதேபோன்ற விளக்குகள் பையம்பள்ளி, ஆதிச்சநல்லூர், கீழடி, அரிக்கமேடு போன்ற இடங்களிலும் முன்பு கண்டறியப்பட்டுள்ளன.