தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சி திடலில் 11-வது நாளாக 'ஒப்பாரி போராட்டம்' நடத்தினர். முறையான காலமுறை ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹6,750 மற்றும் அமைப்பாளர், சமையல் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய கோரிக்கைகள். வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.