மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

0பார்த்தது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ஈஸ்வரி தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அலுவலகப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி